|
|
 |
 |
இந்தியாவில் காலனி ஆட்சிக்காலக் கொள்கை வகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட கல்விமுறையானது இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்த பன்மொழித் தன்மையைப் புறக்கணித்தது நீண்டகாலமாக ஒருமொழித் தன்மைக் கல்விமுறையைப் பின்பற்ற வழிவகுத்தது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலகட்டத்தில் தாய்மொழியை ஒரு ஊடகமாகக்கொண்டு பயிற்றுவிக்கும் கொள்கையானது வளர்ந்தது. பள்ளிக் கல்வியில் இக்கொள்கையைச் செயற்படுத்தும்போது, பெரும்பாலான அறிவுசார் நூல்கள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடநூல்கள் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ள நிலையானது இந்திய உயர் கல்வித்துறையின் முதன்மையான பயிற்றுவிப்பு மொழியாக ஆங்கிலத்தை உருவாக்கியுள்ளது. எனினும், இந்நாட்டில் தற்போதும் பெரும்பான்மையான கல்வியறிவுடையவர்களுக்குக் கூட ஆங்கிலம் எளிதில் நெருங்க முடியாத நிலையிலேயே இருந்துவருகிறது என்பதே உண்மையான நிலவரமாகும். எனவே, நாட்டில் பலத்தரப்பட்ட மக்களைச் சென்றடையும் வகையில், அனைத்து துறைச்சார்ந்த இலக்கிய, தொழில்நுட்ப, அறிவியல், வணிகம் சார்ந்த நூல்கள் அவர்கள் பேசும் மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்படவேண்டியுள்ளது.
நம் நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி முறையில் பல்வேறு மொழிகளுக்கு உரிய இடமளிக்கவேண்டியது அவசியமாகும். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் போன்ற தேசிய அளவிலான முயற்சிகளால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எனவே, மொழிபெயர்ப்பானது அறிவின் பரவலுக்கும் வளர்ச்சிக்கும் உதவும் கருவியாக மட்டுமல்லாமல் மொழியின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறது. இதுவே தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் என்ற எண்ணம் உருவாக வழிகாட்டும் சக்தியாக உள்ளது. |
|