|
அறிவுசார் நூல்கள் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்திலும் கிடைக்க வேண்டும் என்பது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் (NTM) முக்கிய குறிக்கோளாகும். இப்பணிகளை மேற்கொள்ளப் பல்வேறு வழிமுறைகளை இத்திட்டம் வகுத்துள்ளது. இந்த வழிமுறையானது கீழ்க்கண்ட படிநிலைகளில் அமையும்.
அறிவுசார் நூல்களைக் கண்டறிதல்
பல்வேறு பாடப்பிரிவுகளில் மொழிபெயர்க்க வேண்டிய அறிவுசார் நூல்களை அடையாளம் காணுதல் என்பது முதல் நிலை பணியாகும். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நிறைவான குழு ஒன்று இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கிவருகிறது. இக்குழுவானது தேர்ந்தெடுக்கப்பட்ட 69 பாடப்பிரிவுகளில் அறிவுசார் நூல்களின் தரவுத்தளம் ஒன்றினை உருவாக்கிவருகின்றது.
அறிவுசார் நூல்களைத் திரட்டுதல் |
| அறிவுசார் நூல்கள் எனத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தால் கண்டறியப்பட்டுள்ள அறிவுசார் நூல்களானது பதிப்பகத்தாரிடமிருந்து (இந்தியாவிலோ அல்லது வெளிசந்தையிலோ) நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும். பிறகு, இந்நூல்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும்.
|
மொழிபெயர்ப்பு பணிகளைப் பகிர்ந்தளித்தல் |
இந்திய மொழிகளின் நடுவண் மையத்தில் உள்ள, தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் தேசிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் பதிந்துள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகள் பகிர்ந்தளிக்கப்படும். அவர்களின் கல்வித்தரத்திற்கு ஏற்றவகையில் பணிகளானது ஒப்படைக்கப்படும். மேலும், தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் பணிகளானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப்படவேண்டுமென்பதால், மொழிபெயர்ப்பாளரின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் சென்றடையும் தன்மை போன்றவை கவனத்தில் கொள்ளப்படும். வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் மொழிபெயர்க்கப்படவேண்டுமென்பதால், ஒவ்வொரு நூலிற்கும் மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் என்றவகையில் பகிர்ந்தளிப்பது திட்ட வியூகமாகும்.
தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் நீங்களாகவே பதிய இங்கே கிளிக் செய்யவும்.
|
மதிப்பீடு செய்தல் |
| தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தால் பராமரிக்கப்படும் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் மொழிபெயர்ப்பை மதிப்பீடு செய்யக்கூடிய வல்லுநர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றிருக்கும். பொதுவாக, மொழி மற்றும் பாடப்பிரிவு என்ற இரு அடிப்படையில் நூல்களுக்கான மதிப்பீட்டுக் குழுக்கள் உருவாக்கப்படும். மொழிபெயர்ப்புகளின் பிரதிகள் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் தேவைப்படும் திருத்தங்கள் அல்லது மாற்றங்களின் தன்மையைப் பொறுத்து இக்குழுக்கள் ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒன்றுகூடி தகுந்த ஆலோசனைகளை வழங்கும். அனைத்து திருத்தங்களையும் சரிசெய்தபிறகு மதிப்பீட்டுக் குழுவின் இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும். பிறகு, மொழிபெயர்ப்பானது, நூல் வெளியீட்டுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படும். |
அச்சு வடிவில் வெளியிடுதல் மற்றும் மின் நூல்கள் |
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் மொழிபெயர்க்கப்படும் அறிவுசார் நூல்களானது அச்சு மற்றும் மின் நூல் என்ற இரு வடியிலும் பெறும்வகையில் உருவாக்கப்படும். இம்மொழிபெயர்ப்புகள் 22 இந்திய மொழிகளிலும் கிடைக்கும். பொதுவாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அச்சகம் மற்றும் பல்வேறு மண்டல, தேசிய அளவிலான நூல் வெளியீட்டாளர்களுடன் இணைந்து தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மொழிபெயர்ப்புகளானது அச்சு வடிவில் வெளியிடப்படும்.
தொடர்புடைய மொழி மற்றும் புலங்களைச் சார்ந்த வல்லுநர்களின் துணையுடன் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் குழுவினரால் மின்னிதழ்களானது சரியாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
|
மென்பொருள் கருவிகள் |
| மொழிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்குவதற்கும் அவை தொடர்பான ஆய்வுகளுக்கும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் தேவையான ஆதரவினை அளிக்கும். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் உள்ள மென்பொருள் வல்லுநர் குழுவானது பல்வேறு மொழிபெயர்ப்பு மற்றும் அகராதிகள் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கும். இப்பணிக்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்களின் உதவியானது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தால் கோரப்பட்டுள்ளது. சில சேவைகள் வெளித்திறன் அடிப்படையில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் மென்பொருளானது தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இணையத்தளத்தில் கிடைக்கும் வகையில் செய்யப்படும். |
|