National Translation Mission
CIIL
NTM Survey
CIIL
Forum
CIIL
   
Select :
CIIL
Font Issues | Contact Us
 
தேவைப்படும் மொழிபெயர்ப்பாளர்கள்
சுமார் 8000 அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்நூல்களானது சுமார் 69 பாடப்பிரிவுகளைச் சார்ந்தவை.
மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்கும் பணியில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஈடுபட்டுவருகிறது. இது தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் பதிந்துள்ள மொழிபெயர்ப்பாளர்களை வகைப்படுத்தி உருவாக்கப்பட்ட தரவுத்தளமாகும். துறை, திறன் மற்றும் கல்வித்தகுதி என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்கள் வகைப்படுத்தப்படுவர். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மொழிபெயர்ப்பு நிழ்ச்சிகளின் மூலம் பயிற்சி பெற்ற வல்லுநர்களும் இத்தரவுத் தளத்தில் இடம்பெறுவர்.

இணையத்தில் உள்ள தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் தங்களது பெயர்களைப் பதிய விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள் பதிவேட்டில் பதிய இங்கே கிளிக் செய்யவும்.
 
தேவைப்படும் மதிப்பீட்டு வல்லுநர்கள்
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டு வல்லுநர்களை இத்திட்டம் எதிர்நோக்கியுள்ளது. மொழிபெயர்க்கப்பட்ட அறிவுசார் நூலின் தன்மைக்கேற்ப மொழி மற்றும் பாடப்பிரிவு என்ற இரண்டிலும் மதிப்பீட்டு வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். (பாடப்பிரிவுகள் பட்டியலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

மதிப்பீட்டு வல்லுநர்கள் குறித்த தரவுத்தளமானது தேசிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான அட்டவணையின் கீழ் இணையத்தளத்தில் பராமரிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு துறை மற்றும் பிரிவுகளைச் சார்ந்த வல்லுநர்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் தாங்களாகவே சென்று பதிய இங்கே கிளிக் செய்யவும்.
 
தேவைப்படும் பல்துறை அறிவுசார் வல்லுநர்கள்
இணையப் பக்கங்களின் படிம அச்சுக்களைப் பல்வேறு பிரிவுகளில் உருவாக்கப் பல்துறை வல்லுநர்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்குத் தேவைப்படுகின்றனர். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அறிவுசார் நூல்களும் இணையத்தில் வெளியிடப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தேவையை நிறைவுசெய்யும் வகையில் உள்ளடக்கங்கள் இருக்குமாறு தனித்தன்மைவாய்ந்த படிம அச்சுக்களை உருவாக்கவேண்டியுள்ளது. அவ்வத்துறைகளில் இப்படிம அச்சுக்களை வடிவமைக்கவும் உருவாக்கவும் உதவிபுரியக்கூடிய வல்லுநர்கள் இத்திட்டத்திற்குத் தேவைப்படுகின்றனர்.

தாங்கள் இத்துறை வல்லுநர் என்றால் உங்கள் தன்விவரப்பட்டியலை இங்கே சமர்ப்பிக்கவும். (பாடப்பிரிவுகள் பட்டியல் இடப்பட்டுள்ளதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
www.ciil.org | www.anukriti.net | www.ciilaudiovideo.net | www.ciil-grammars.org | www.ciil-spokencorpus.net
 
  Central Institute of Indian Languages
Department of Higher Education,Language Bureau, Ministry of Human Resource Development
Government of India
Manasagangothri, Hunsur Road, Mysore 570006
Tel: (0821) 2515820 (Director), Reception/PABX : (0821) 2345000, Fax: (0821) 2515032 (Off)