|
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) என்பது மொழிபெயர்ப்பின் மூலம் அறிவுசார் நூல்களின் பயனை இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்திலும் பெறும்வகையில் இந்திய அரசால் துவக்கப்பட்டுள்ள திட்டமாகும். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் என்ற எண்ணத்தின் மூலமானது முதலில் இந்திய பிரதமர் அவர்களிடமிருந்து தோன்றியது ஆகும். மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கிய துறைகளின் அறிவுபெருக்கத்திற்கு உயிராதாரமாக விளங்குகின்றன என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதற்கிணங்க இத்திட்டமானது உதித்தது.
பிற இலக்குகள்
இந்திய மொழிகளில் பல்வேறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள செய்தியைப் பரப்புதல்
மொழிபெயர்ப்பு மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவுசார் நூல்களின் உயர்தரத் தரவகம் ஒன்றை உருவாக்குதல்
தரம்வாய்ந்த அகராதிகள், சொற்களஞ்சியங்கள் முதலான மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குதல்
நினைவகம், வேர்டு-பைன்டர், வேர்டுநெட் போன்ற மொழிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்கும் ஆய்வுகளுக்கு உதவிசெய்தல்
குறுகிய காலப் புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சியளித்தல்
மொழிபெயர்ப்பாளர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்குதல்
ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ள ஆய்வு உதவித்தொகை, நிதியுதவி வழங்குதல்
ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையே, ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொரு இந்திய மொழிக்கு மற்றும் இந்திய மொழிகளுக்கும் உலகின் பிற முக்கிய மொழிகளுக்கும் இடையே எந்திர மொழிபெயர்ப்பு மற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு (MAT) மேற்கொள்வதை ஊக்குவித்தல்
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்கள் |
பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ள அறிவுசார் நூல்களைப் பெறும் வாய்ப்பில்லாத ஊரக, நலிவடைந்த மாணவர்கள்,
|
வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறுபாடநூல்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், |
|
அமைப்பு சாரா கல்வித்திட்டத்தின் கீழ் பணிசெய்யும் தன்னார்வத் தொண்டர்கள், |
|
பொது சுகாதாரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், அறிவியலைப் பிரபலப்படுத்துதல் முதலான இலக்குகளுக்காகப் பாடுபடும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், |
|
வருணனையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், |
|
பல்வேறு மொழிகளில் துணைத் தலைப்புகள், பன்மொழி வெளியீடுகள் போன்றவற்றை வெளியிட விரும்பும் திரைப்பட/ஆவணப் படத் தயாரிப்பாளர்கள், |
|
பல்வேறு மொழிகளில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பண்பலை (எப்எம்) மற்றும் பிற வானொலி நிலையங்கள்,, |
|
தங்களது சொந்த மொழியில் இலக்கியங்கள், அறிவுசார் நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள பொதுமக்கள் , |
|
புதிய மற்றும் சிறந்த முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் வட்டார மொழி நூல் வெளியீட்டாளர்கள், |
|
பணியமர்த்தப்படும் மொழிபெயர்ப்பாளர்கள், |
|
பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் மொழிபெயர்ப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள மொழிபெயர்ப்புத்துறைகள் மற்றும் ஆய்வாளர்கள், |
|
மொழிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்குபவர்கள், ஒப்பிலக்கிய கல்வியாளர்கள், |
|
|