தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைப்பு நிறுவனமாகவும் திட்டத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளைச் செய்துகொடுக்கும் நிறுவனமாகவும் செயற்படும். இத்திட்டமானது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திலிருந்து செயற்படும்.
திட்ட மேம்பாட்டு வாரியமானது 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். கல்வியாளர்கள், மொழிபெயர்ப்பைக் கற்பிக்கும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இலக்கியங்கள் தொடர்பான நிறுவனங்களின் தலைவர்கள், நூல் விற்பனையாளர்கள், நூல்வெளியீட்டு நிறுவனங்களைச் சார்ந்த சங்கங்கள், மொழிபெயர்ப்பின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர்.
இரட்டிப்பான பணிகளைத் தவிர்த்தல், ஒருங்கிணைப்பினை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த, மீட்சிதன்மையுடன் கூடிய மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளைக் குறிப்பாக நேஷனல் புக் ட்ரஸ்ட், பல்கலைக்கழக மானியக் குழு, சாகித்திய அகாதமி, மொழிபெயர்ப்பு கேந்திரங்கள், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பைப் பயிற்றுவிக்கும் மற்றும் ஆய்வுத்திட்டங்களாக வழங்கும் துறைகள், கிரந்த அகாதமிகள், பிற மாநில அரசு நிறுவனங்கள், பொது நூலக வலையமைப்புகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும், பதிப்பாளர்கள், பத்திரிக்கைகள் மற்றும் பிற ஊடகங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் இணைப்பும் அவசியமாகின்றது. இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முதிர்ச்சியடைந்த வாசகர்கள், பிற பொதுமக்கள் முதலியவர்களுக்கிடையே கலந்துரையாடி அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் இத்திட்டமானது இருக்கவேண்டும். ஏற்கெனவே இயங்கி கொண்டிருக்கின்ற பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையே கையாளவேண்டிய உத்தியினை நிர்ணயித்தல் மற்றும் ஒன்றுபட்டு உழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துதல் என்பன இதில் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
|