உயர்கல்வியுடன் தொடர்புடைய கற்பித்தல் வளங்கள் அனைத்தும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் அறிவுசார் நூல்களாகக் கருதப்படுகின்றன.இந்த நூல்களை மொழிபெயர்த்து இந்திய மொழிகள் அனைத்திலும் கிடைக்கும் வகையில் செய்வது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் கற்பிக்கப்படும் பாட நூல்கள் ,குறிப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புக்கு முதன்மையான நூல்களாகக் கருதப்படுகின்றன.இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் நூல்களின் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் உயர்கல்வியில் 70 முக்கியமான பாடப்பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது.இந்தப் பாடப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி ஆலோசனைச் சபையாலும் அங்கிகரிக்கப்பட்டவையாகும்
| அறிவுசார் நூல்கள் என்ற பகுதியில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட முயற்சியால் விளையும் பயன்கள் |
பல்வேறு பாடப்பிரிவுகளில் அறிவுசார் நூல்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் போதுமான அளவில் இதனால் நிரப்பப்படுகிறது.
இயற்கை அறிவியலில் கருத்துக்கள் மற்றும் கலைச்சொற்களைச் சிறந்தமுறையில் தரப்படுத்துதல் என்பது நல்ல புரிந்துணர்தலையும் பல்வேறு மொழிகளை இலகுவாக அறிந்து கொள்ளவதையும் உறுதி செய்கிறது.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவிகள் தரப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் கலைச்சொற்களின் தரவுக்களஞ்சியத்தைப் பயனாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் செய்கின்றது.
உண்மையான வெளியீட்டிற்கும் மொழிபெயர்க்கப்படும் பதிப்புக்கும் இடையேயுள்ள கால இடைவெளி குறையும். |