|
|
 |
 |
1. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் நான் பங்கேற்பது எவ்வாறு?/ நான் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பதிய விரும்புகிறேன். அதனைச் செய்வது எவ்வாறு?/ஒரு இளங்கலை மாணவராக இருந்துகொண்டு தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்து கொள்வது எப்படி?
பதில். http://www.ntm.org.in/register_ntm.asp. என்ற இணைய முகவரியில் உங்களது விரிவான தன்விவரக் குறிப்பினைச் சமர்ப்பிக்கவும். கூடிய விரைவில் எங்களது பதில் உங்களை வந்தடையும் என்று உறுதியளிக்கிறோம்.
2. நான் ஒரு குறிப்பிட்ட நூலை மொழிபெயர்த்து வெளியிட விரும்புகிறேன். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் அதனை மேற்கொள்வது எப்படி?
பதில். உங்களது விரிவான திட்ட முன்மொழிவினை உங்களது பணியின் மாதிரி ஒன்றுடன் சமர்ப்பிக்கவும். எங்கள் குழுவானது அதனை மதிப்பீடு செய்து பதிலை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்.
3. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்துடன் இணைந்து பணியாற்ற அடிப்படைத்தேவைகள் என்ன?
பதில். மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது தனித்துவத்துடன் செயல்படுகிறது. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது மொழிபெயர்ப்பாளர்களின் இலக்குமொழி, மூலமொழிப் புலமை மற்றும் குறித்த காலத்தில் மொழிபெயர்பை முடித்து தரக்கூடிய திறமை முதலியவைகளை மட்டுமே எதிர்பார்க்கின்றது. வயது, தகுதி, இருப்பிடம் முதலியவைகள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு தடையாக இருக்காது.
4. எனக்கு அமைவிடப் பிரச்சனை (location constraint)உள்ளது. இருப்பினும் நான் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்துடன் இணைந்து பணியாற்ற முடியுமா?
பதில். மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மொழிபெயர்ப்புத் தொழிலை மேம்படுத்தும் வகையிலும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைவிடமானது இத்திட்டத்தில் ஒரு பிரச்சனையாக இருக்காது. இவ்வுலகில் எந்த ஒரு பகுதியில் நீங்கள் வசிப்பவர் என்றாலும் இத்திட்டத்தில் பங்குபெறலாம்.
5. பல் ஊடக மொழிபெயர்ப்பு (media translation) என்றால் என்ன?
பதில். எழுத்து மற்றும் பேச்சுவழக்கில் அமைந்த ஆவணங்களே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன அல்லது பொருள் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையிலும் இல்லாத அனைத்தும் பல் ஊடக மொழிபெயர்ப்பு எனப்படும். உதாரணமாக, வர்ணணை செய்தல், வாய்ஸ்ஒவர் சேவைகள், துணைத் தலைப்பிடல், இணையத்தள மொழிபெயர்ப்பு மற்றும் பன்மொழி மேசைப் பதிப்பு போன்றவை பல் ஊடக மொழிபெயர்ப்பின் கீழ் வருபவையாகும்.
6. வாய்ஸ்-ஒவர் (voice-over), வர்ணணை செய்தல் (narration) போன்றவை உங்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் பகுதியாக உள்ளனவா?
பதில். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமானது, ஆவணப்படுத்துதல் மற்றும் வர்ணணை செய்தல், வாய்ஸ்ஒவர் செய்தல் போன்ற திட்டங்களில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இப்பணிகளைத் திறம்பட எளிதில் மேற்கொள்ள ஏதுவான தொழில்முறை அரங்கம் ஒன்று உள்ளது. எனவே, எந்த ஒரு திட்டத்திற்கும் இக்கருவிகள் தேவைப்படும் என்றால், தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் அவற்றினைப் பயன்படுத்திக் கொள்ளும்.
7. நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவிகள் எதையாவது பயன்படுத்தப் போகிறீர்களா?
பதில். உயர்தர மொழிபெயர்ப்புக் கருவிகளான அகராதிகள், மொழிபெயர்ப்பினை வழங்கும் மென்பொருட்கள், வேர்டுநெட் போன்றவற்றை உருவாக்குவது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இத்தகைய கருவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
8. நான் ஒரு நூலை மொழிபெயர்க்கும் போது எவ்வகை வடிவத்தை (format) கையாள்வது அல்லது பின்பற்றுவது ?
பதில்.
9. நான் மொழிபெயர்ப்பின் மதிப்பீடு ஒன்றினைப் பெறுவது என்பது எப்படி ?
பதில்.
10. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கென்று படிப்புகள்/ புத்தாக்கப் பயிற்சிகள் போன்றவை ஏதாவது இருக்கின்றனவா?
பதில். இத்திட்ட நடவடிக்கைகளுக்குச் சிறப்பு பயிற்சித் தேவைப்படுவதால், மொழிபெயர்ப்பாளர் பயிற்சி என்பது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேலும், குறுகிய காலப் பயிற்சிவகுப்புகள் நடத்துதல், பாடப் பிரிவுத் தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குதல், மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சிறப்புப் பாடத்திட்டங்களை உருவாக்கரத் தேவையான உதவிகளை வழங்கி ஊக்குவித்தல், ஆய்வுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல், ஆய்வு உதவித்தொகைகள் வழங்குதல், மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தலுக்கு உகந்தவாறு மாற்றியமைக்க தேவைப்படும் கூர்ந்தாய்தல் (vetting), பதிப்பித்தல் (editing) மற்றும் திருத்தி அமைத்தல் (copy-editing) போன்ற பணிகளுக்கான பயிலரங்குகளை நடத்துதல் போன்றவற்றின் மூலம் மொழிபெயர்ப்பபாளர்களுக்குத் தேவையான ஆதரவினை தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் வழங்கும்.
11. எனது விருப்பத்திற்கு ஏற்றவகையில் நூல் ஒன்றை நான் மொழிபெயர்க்க இயலுமா? அல்லது நூல் தேர்வு மற்றும் நூல் இரண்டையும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது வழங்குமா?
பதில். தேசிய மொழிபெயர்ப்பத் திட்டத்தின் அறிவுசார் நூல்களின் தரவகமானது அனைத்து மொழிபெயர்ப்புகளுக்கும் மூலங்களாகும். |
|
|