|
|
 |
அனுகிருதி
‘அனுகிருதி’ என்ற பெயரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் ஏற்கெனவே மொழிபெயர்ப்பிற்கான பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகின்றது. இதுகாறும் அனுகிருதி திட்டத்தின் கீழ் எய்தப்பட்டுள்ள பணிகள் பின்வருமாறு |
|
கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு உதவி இணைய தளம் www.anukriti.net தொடங்கப்பட்டு, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
|
|
‘ட்ரான்ஸ்லேஷன் டுடே’ என்ற பெயரில் இணையவழி மொழிபெயர்ப்பு இதழ் ஒன்று தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. |
|
மொழிபெயர்ப்புத் தரவுத்தளம் மற்றும் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேடு போன்றவைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
|
|
ஆங்கிலம்-கன்னடம் மொழிகளில் எந்திரவழி மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
|
|
நூல் வெளியீட்டு நிறுவனங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள மொழிபெயர்ப்புப் பதிப்புகளின் விவரப்பட்டி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
|
|
பல்வேறு மொழிபெயர்ப்புத் தொடர்பான படிப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிடைக்குமிடங்களைப் பற்றிய விவரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. |
|
தொழில்முறையில் மொழிபெயர்ப்பை மேற்கொள்ளும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
 |
இணையத்தளத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்காக மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் விற்பனைசெய்யும் இணையத்தளங்களின் இணைப்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன |
 |
மொழிபெயர்ப்புப் படிப்புகள் தொடர்பான கலைச்சொல்லகராதி, நூல்விளக்க அட்டவணை போன்றவை முடியும் தருவாயில் உள்ளன. |
| |
|
இந்திய மொழிகளுக்கான மொழியியல் தரவுக் கூட்டமைப்பு (LDC-IL) |
இந்திய மொழிகளில் மொழியியல் தரவகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் களத்திலுள்ள ஆய்வாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள் முதலானவர்களுக்கு உதவிபுரிவதற்காக இந்திய மொழிகளுக்கான மொழியியல் தரவுக் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. மொழிதரவு என்பது மொழியியல் தொழில்நுட்ப ஆய்விற்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத ஆக்கக் கூறாகும். இந்தி மற்றும் இதர மொழிகளில் எந்திரம் படிக்கத்தகுந்த மொழியியல் தரவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இத்திட்டம் வலியுறுத்துகிறது. மொழியியல் தரவுகளைத் திரட்டுதல், செயலாக்குதல், விளக்குதல் போன்ற பல்வேறு சூழல்கள் சார்ந்தப் பிரச்சினைகள் உள்ளதால் மொழியியல், புள்ளியியல், பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளை இப்பணிகளில் ஈடுபடுத்துவது அவசியமாகின்றது.
LDCIL மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதோடு பின்வரும் பணிகளையும் மேற்கொள்ளும்:
|
|
சொல், பேச்சு மற்றும் சொற்களஞ்சிய அகராதிகள் என்ற வடிவங்களில் மொழியியல் வளங்களுக்கான தரவுக்களஞ்சியம் ஒன்றை அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்குதல். |
|
இதுபோன்ற தரவுக் களஞ்சியங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல். |
|
தரவுகள் சேகரித்தலை தரம்படுத்தல் மற்றும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளின் மொழியியல் விரிதரவினைத் தேக்ககம் செய்தல். |
|
தரவினைச் சேகரித்தலுக்கு உதவும் கருவிகளை உருவாக்குதல், பகிர்தல் மற்றும் நிர்வகித்தல். |
|
தொழில்நுட்பம், செயலாக்கம் சார்ந்தப் பிரச்சினைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிலரங்குகள், கருத்தரங்குகள் முதலியவற்றினை நடத்த ஆதரவளித்தல். |
|
LDC-IL கூட்டமைப்பின் வளங்களை அணுகும் வகையில் அமைந்த LDC-IL இணையத்தளம் ஒன்றைத் துவக்குதல் மற்றும் பராமரித்தல். |
|
பெரும் அளவு மக்களுக்கு உதவும் வகையில் அமைந்த உரிய மொழியியல் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்தல் அல்லது வடிவமைப்பதற்கு உதவிபுரிதல். |
 |
கல்வி நிறுவனங்கள், தனிப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே தேவையான இணைப்பினை ஏற்படுத்துதல். |
| |
|
| இந்நடவடிக்கைகள், எந்திர மொழிபெயர்ப்பிற்கான செயல்பாடுகளை எளிதாக்குவதால் இவை தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கு நேரடியாகப் பலனளிக்கும்.
|
கதா பாரதி |
| கதாபாரதி திட்டத்தின் கீழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பானது நடைபெற்றுவருகிறது.
|
|
|