|  | 
                 
         
         | 
        திட்டப் பயனாளிகள்
                         
    
        
        
            
                | இத்திட்டத்தினால் கிடைக்கும் பலன் பல்வேறுத் தரப்பட்டவர்களைச் சென்றடையும் என்ற போதிலும்
                    தலையாய/முக்கியமான பயனாளியாகக் கருதப்படுபவர்கள் ஆங்கிலத்தில் உள்ள அறிவுசார் நூல்களைப்
                    பெறும் வசதி வாய்ப்பில்லாத, ஊரக, நலிவடைந்த மாணவர்கள்தான். தங்கள் பிறப்பாலும் சாதி,
                    வகுப்பு போன்ற பேதங்களாலும் சூழல், இருப்பிடம் காரணமாகவும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகள்
                    போய்ச் சேராத ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் போய்ச் சேரவேண்டும் என்ற உயரிய இலக்குடன் துவக்கப்பட்டுள்ளது.
                    மொழிபெயர்க்கப்படும் அறிவுசார் நூல்கள் நமது சமுதாயத்திலுள்ள அறிவைத் தேடும் ஒடுக்கப்பட்ட
                    பிரிவினரைப் போய்ச் சேர்ந்தால்தான் இத்திட்டத்தின் உண்மையான குறிக்கோள் முழுமையடையும். 
 இத்திட்டத்தினைப் பரவலாகச் செயல்படுத்தத் துவங்கினால் அதன் நேரடி பலன் பின்வரும் பல்வேறு
                    குழுக்களைச் சென்றடையும்:
 |  
            
                | 1. | தங்களது சொந்த மொழியில் இலக்கியங்கள், அறிவுசார் நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்
                    உள்ள பொதுமக்கள் . |  
                | 2. | தகுந்த ஊதியத்துடன் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள்
                    , |  
                | 3. | புதிய, சுவையான நூல்களை வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள், |  
                | 4. | பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், |  
                | 5. | முறைசாரா கல்வித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டர்கள், |  
                | 6. | பொது சுகாதாரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், அறிவியலைப் பிரபலப்படுத்துதல் ஆகிய
                    இலக்குகளுக்காகப் பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), |  
                | 7. | வருணனையாளர்கள் (interpreters) தேவைப்படும் தனியார் நிறுவனங்கள்,. |  
                | 8. | வழிகாட்டிகள், மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கல்வியாளர்கள், |  
                | 9. | துணைத் தலைப்புகளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் படத் தயாரிப்பாளர்கள்,
                    விளம்பரதாரர்கள் |  
                | 10. | தங்கள் நிகழ்ச்சிகளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் வானொலி
                    மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட கலைத்துறையினர், |  
                | 11. | மொழிபெயர்ப்பு பயிற்சியாளர்கள் . |  
                | 12. | பல்கலைக்கழகங்கள் , பிற மொழிபெயர்ப்பில் ஈடுபடும் மொழிபெயர்ப்புத் துறைகள் |  
                | 13. | மொழிபெயர்ப்புத் தொடர்பான பல்வேறு துறைகளில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் |  
                | 14. | மொழிபெயர்ப்பிற்குத் தேவையான மென்பொருள் தயாரிப்பாளர்கள் . |  
                | 15. | ஒப்பிலக்கியத்தில் ஈடுபடும் கல்வியாளர்கள். |  
            
                | இத்திட்டத்தின் தொடக்கமாகத் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேடு ஒன்று,
                    அனுக்கிருதி இணையத்தளத்தில் வெள்ளோட்டமாக விடப்பட்டுள்ளது. முன்னதாக இப்பதிவேடானது
                    சாகித்திய அகாதமியால் அச்சு வடிவில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. நாட்டின் பல்வேறுப்
                    பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஏராளமான மொழிபெயர்ப்பாளர்களின் சங்கங்களைத் (Translators’s
                    Association) தக்கவாறு பயன்படுத்திக் கொள்வதுடன் தனியார் நூல்வெளியீட்டு நிறுவனங்களில்
                    பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும். இப்பணிகள்
                    அனைத்தும் திறம்பட தொழில்முறையில் நிர்வகிக்கப்படுவதுடன், பொதுத்துறை மற்றும் தனியார்
                    நிறுவனங்களுக்கு உடனுக்குடன் தேவைப்படும் மொழிபெயர்ப்புகளை நிறைவேற்றும் பணிகளையும்
                    இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் தொழில்முறையிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான
                    பயிற்சித் திட்டங்கள் (Professional Translator’s Training Programmes) அளிக்கும்வகையில்
                    சிறுநகரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மொழிபெயர்ப்புத் தொடர்பான கண்காட்சிகள்,
                    விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் தேவையான மனித ஆற்றலைக் கண்டறிதல்,
                    உருவாக்குதல் முதலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இம்முயற்சிகளின் மூலமாக மொழிபெயர்ப்பானது
                    ஒரு பெரிய தொழில்துறையாக உருவெடுக்கும் என நம்புகிறோம் 
 இம்மொழிபெயர்ப்புத் திட்டத்தின் வாயிலாகப் பொதுமக்கள், கல்விக்கூடங்கள், ஆராய்ச்சி
                    நிறுவனங்களுக்குத் தேவைபடும் அறிவுசார் நூல்கள் அவர்களின் முழுத் தேவையைப் பூர்த்திசெய்யும்
                    வகையிலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் அச்சிடப்பட்ட நூலாக வழங்கப்படும்.
                    இந்த அறிவுசார் நூல்கள் தேசிய மொழிப்பெயர்ப்புத் திட்டத்தின் பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலுமுள்ள
                    இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திலுள்ள பெருமுகக் கணினியில்(Server) இருந்து இணையத்தின்
                    வாயிலாக இலவசமாக வழங்கப்படும். தேசிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டில் தங்களது
                    கணக்கைப் பதிந்துள்ளவர்களே இணைய வடிவ அறிவுசார் நூல்களின் அமைப்பை அல்லது அதன் வெளியீட்டைப்
                    பயன்படுத்தும் உரிமையைப் பெறுவர். இதனால் இணையவழி நூல்களைப் (net based texts)பயன்படுத்தும்
                    அறுதியிட்ட இறுதிப் பயனாளர்களின் (end-users) எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட இயலும்.
                    இறுதியாக, அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இத்திட்டத்தினால் உருவாக்கப்படும்
                    அகராதிகள், சொற்களஞ்சியங்கள், வேர்டு பைன்டர்கள், சொற்றொகுதி விளக்கப்பட்டியல் (concordances),
                    வேர்ச்சொல் அகராதிகள் (etymological dictionaries), ஒளி மற்றும் ஒலி அகராதிகள் போன்ற
                    மூலத்தரவுகளை அனைவருக்கும் இலவசமாகப் பெறும் வழிவகை செய்யப்படும்.
 
 வேறுபட்ட இருமொழிகளுக்கு இடையான இலக்கமுறை அகராதிகள் (digital dictionaries) மற்றும்
                    எந்திரம் சார் மொழிபெயர்ப்பு மென்பொருட்களைத் தயாரிப்பதைத் தனது முதன்மையானப் பணியாக
                    எடுத்துக்கொள்ளும். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), பல்கலைக்கழகங்கள், இந்திய
                    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIITs), டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்
                    (TIFR), இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) போன்ற கல்விநிறுவனங்களும் மென்பொருள் தயாரிப்பதில்
                    அனுபவமும் திறனும் உடைய பெரிய நிறுவனங்களும் இக்கடினமான இலக்கை எய்த முயற்சிசெய்தபோதிலும்
                    பிழையற்ற உயர்திறனுடைய கருவிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, இம்முயற்சியினை நிறைவேற்ற
                    தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படும். முதற்கட்டமாக,
                    இலக்கமுறை அகராதிகள், வேர்டு பைன்டர், சொற்களஞ்சியங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்
                    பின்னர் தானியங்குக் கருவிகளைக் (automated tools) கொண்டு மொழிபெயர்ப்பதையும் செயல்படுத்தும்.
 |  
                |  |  |  |