மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வித் திட்டம்

என்டிஎம்மின் ஒரு அம்சமான மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கம் அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதெற்கென மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகும். இக்கல்வித் திட்டம் மொழிபெயர்ப்பை தங்களுடைய தொழிலாக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கு கல்விசார்ந்த உதவிகளையும் வழங்குகிறது. இந்தியாவில் மொழிபெயர்ப்பின் வரலாறு மற்றும் மரபு, இந்திய மொழிகளில் அறிவுசார் நூல்களை மொழிபெயர்க்கப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சவால்களும் மற்றும் மொழிபெயர்ப்புக் கருவிகளான அகராதிகள், கலைச்சொல்லடைவுகள் மற்றும் சொற்களஞ்சியங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பனவற்றிலும் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்திறப்புலமையுடைய திறமையான மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். மேற்கூறிய இலக்கை அடைய, என்டிஎம் பணிபட்டறைகள், புத்தறிவுப்பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது. டிரான்ஸ்லேசன் டுடே (Translation Today) (ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் என்டிஎம்மின் ஆய்விதழ்), மொழிபெயர்ப்பாளர்களுக்கான கையேடு, என்டிஎம் ஊடகத்தினர் தயாரித்த காணொளிப் படங்கள் மற்றும் என்டிஎம்மின் பாடத்திட்ட நூல்கள் போன்றவை மொழிபெயர்பாளர்களுக்குக் கற்பிப்பதில் உபகரணங்களாகப் பயன்படுகின்றன.