|  | 
                 
         
         | 
       வெளியீடுகள்
                         
    
        
            
                | மொழிபெயர்ப்புச் செயல்முறையை முறைப்படுத்தும் முயற்சியில் என்டிஎம் பின்வரும் வழிமுறைகளைப்
                    பின்பற்றுகிறது. மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்களை அடையாளம் காணுதல்; அடையாளம் காணப்பட்ட
                    நூல்களுக்கான அறிவுசார் சொத்துரிமையைப் பெறுதல்; இந்திய மொழி வெளியீட்டாளர்களை தொடர்பு
                    கொள்ளுதல் மற்றும் இந்திய மொழிகளில் என்டிஎம் அமைத்துள்ள மொழி உதவிக் குழுக்களின் வழிகாட்டுதலில்
                    மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை மதிப்புரை செய்வது. மொழிபெயர்க்கப்பட்ட நூலின் மதிப்புரை
                    இரு வேறுப்பட்ட நிலைகளில் நடைபெறும். மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பத்து
                    பக்கங்களை என்டிஎம்மிற்கு முதல்நிலை மதிப்புரை மற்றும் ஒப்புதலுக்காகச் சமர்பிக்க வேண்டும்.
                    மொழிபெயர்க்கப்பட்ட நூலின் முழு கையெழுத்து பிரதி சமர்பிக்கப்பட்டவுடன் இறுதி மதிப்புரை
                    செய்யப்படும். இந்த அடுக்கு மதிப்புரை முறை தரமான மொழிபெயர்ப்புக்கு உதவும். 
 |  |  |