|  | 
                 
         
         | 
        நடப்பு முயற்சிகள்
                         
    
        
        
            
                |  |  
                | ‘அனுகிருதி’ என்ற பெயரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் மொழிபெயர்ப்பிற்கான
                    பெரும்திட்டம் ஒன்று திட்டக்குழுவின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து இந்திய
                    மொழிகளிலும் உள்ள மொழிபெயர்ப்பு தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களுடன், அனுகிருதி :
                    டிரான்ஸ்லேட்டிங் இந்தியா என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட இணையத்தளம் ஒன்று இயங்கிவருகிறது.
                    இந்திய மொழிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மூன்று பெரும் நிறுவனங்களான
                    இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், (மனித வள மேம்பாட்டு அமைச்சகம்), சாகித்திய
                    அகாதமி மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட், புதுடெல்லி ஆகியவற்றின் எண்ணத்திற்கேற்ப இவ்விணையத்தளம்
                    தொடங்கப்பட்டுள்ளது. 
 
 |  
            
                | பத்தாவது திட்டக்காலத்தில் சுமார் ரூ. 59.64 இலட்சம் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
                    அனுகிருதி திட்டத்தின்கீழ்ப் பின்வரும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: 
 
 |  
            
                |  | » | கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்காக www.anukriti.net என்ற இணையத்தளம் ஒன்று
                    தொடங்கப்பட்டு, இந்த மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்டு
                    இருக்கின்றன. |  
                |  | » | ‘ட்ரான்ஸ்லேஷன் டுடே’என்ற பெயரில் இணையவழி மொழிபெயர்ப்பு இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. |  
                |  | » | மொழிபெயர்ப்புத் தரவுத்தளம் மற்றும் தேசிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேடு
                    ஒன்று தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. |  
                |  | » | ஆங்கிலம்-கன்னடம் மொழிகளில் எந்திரவழி மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கான
                    அடிப்படை பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. |  
                |  | » | நூல் வெளியிட்டு நிறுவனங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள மொழிபெயர்ப்புப் பதிப்புகளின்
                    விவரப்பட்டி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. |  
                |  | » | பல்வேறு மொழிபெயர்ப்புத் தொடர்பான படிப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிடைக்குமிடங்களைப்
                    பற்றிய விவரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. |  
                |  | » | பல்வேறு தொழில்முறை மொழிபெயர்ப்பு நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. |  
                |  | » | இணையத்தளத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்காக மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் விற்பனைசெய்யும்
                    இணையத்தளங்களின் இணைப்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. |  
                |  | » | மொழிபெயர்ப்புப் படிப்புகள் தொடர்பான கலைச்சொல்லகராதி, நூல்விளக்க அட்டவணைப் போன்றவை
                    முடியும் தருவாயில் உள்ளன. 
 
 |  
            
                |  |  
                | தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம் இதுவரை 12 ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களை
                    இந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.. பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும்
                    இம்முயற்சியினைத் தொடர தேவையான உதவிகளைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் மேற்கொள்ளும். 
 
 |  
                |  |  
                | இந்தியாவில் சாகித்திய அகாதமி (1954), நேஷனல் புக் ட்ரஸ்ட் (1957) போன்ற பொதுத்துறை
                    நிறுவனங்கள், பல்வேறு மொழிகள், மண்டலங்கள், சமயங்கள் போன்றவற்றை இணைக்கும் பாலங்களாக
                    விளங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மொழிபெயர்ப்புக்களை வெளியிடுவதை தங்கள் நிறுவனத்தின்
                    ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. 
 சாகித்திய அகாதமி துவங்கப்பட்டதில் இருந்து வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து
                    வட்டார மொழிகளுக்கும் வட்டார மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும் இலக்கிய நூல்களின்
                    மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுவருகிறது, இதுவரையில் 24 மொழிகளில் சுமார் 7000 தலைப்புக்களில்
                    பல்வேறு நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலில் சாகித்திய அகாதமியால் அங்கீகரிக்கப்பட்ட
                    மொழிகளில் மட்டுமே மொழிபெயர்ப்புகள் நடைபெற்றன. முதலில் பரோடாவில் துவங்கப்பட்டு, தற்போது
                    ஷில்லாங்கைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் பழங்குடியினர் இலக்கியங்களுக்கான
                    சிறப்புத் திட்டத்தின் மூலம் கத்வாலி, பிலி, குய், கரோ, கம்மிட், மிஜோ, லெப்சா, முண்டாரி,
                    கோண்டி போன்ற பழங்குடியினர் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் உள்ள செய்திகளை மொழிபெயர்க்கும்
                    பணி தொடங்கப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய பங்கானது இந்திய மொழிகளுக்கு இடையேயான
                    மொழிபெயர்ப்பே ஆகும்.
 
 நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனம், இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள
                    மொழிகளில் உள்ள தற்கால இலக்கியங்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஆதன்-பிரதான்
                    தொடர்களாக வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் இலக்கியங்களைத் தவிர மனித உரிமைகள், சுகாதாரம்,
                    கலை, கட்டடவியல், ஆட்சியியல், வரலாறு முதலிய அறிவுசார்துறைகளைச் சார்ந்த நூல்களையும்
                    பொதுமக்களிடையே பரவலாகப் புகழ்பெற்றிருக்கும் தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளின்
                    தொடரையும் வெளியிடுகிறது.
 
 எண்பதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியப் பொருளாதாரக் கொள்கைப் பல்வேறுப் பன்னாட்டுப்
                    பதிப்பாளர்களை இந்தியாவில் இத்தொழில்துறையில் முதலீடுசெய்ய தூண்டியுள்ளது. தற்போது
                    கல்வியைச் சார்ந்த 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பதிப்புகள் ஆங்கிலத்திலேயே பன்னாட்டு
                    பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றது. தொழில்முறையைச் சார்ந்ததாக, தரத்துடன், விற்பனையை
                    மனதிற்கொண்டே இந்த வெளியீடுகள் அமைந்திருக்கின்றன. கல்வித்துறையில் பெரிய அளவில் பியர்சன்
                    எஜிகேஷன், ராண்டம் ஹவுஸ், ஷேஜ், மெக்ரா ஹில் போன்ற பதிப்பகங்களும் ஓரியன்ட் லாங்மென்
                    (திஷா தொடர்கள்), மெக்மில்லன் (புதினங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடர்கள்), பெங்குயின்
                    இந்தியா, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், ரூபா அன்ட் கோ, ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற
                    பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பிலும் கவனத்தைச் செலுத்துகின்றன. இதில் வியப்பிற்குரியது
                    என்னவென்றால் கதா போன்ற நிறுவனங்கள் மொழிபெயர்ப்பிற்காக தங்களை முழுமையும் அர்ப்பணித்துக்
                    கொள்வதாகும். ஸ்டிரி, ஜூபான், ரோலி, விமன் அன்லிமிடெட் போன்ற சிறிய பதிப்பகங்களும்
                    தற்போது மொழிபெயர்ப்பில் கவனத்தைச் செலுத்துகின்றன.
 
 ஆங்கில இலக்கிய மொழிபெயர்ப்புகளின் போக்கு ஓரளவு நல்ல நிலையில் இருந்த போதிலும் பின்வரும்
                    மொழிபெயர்ப்புகளின் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. (1)ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படும்
                    பிற வகை நூல்கள், (2) ஆங்கிலம், பிற இந்திய மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்,
                    (3) இந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்பும் சமநிலையற்று காணப்படுகிறது. உதாரணமாக,
                    வங்காள மொழியில் உள்ள 260 நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் மலையாளத்திலிருந்து
                    12 நூல்களே வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இச்சமச்சீரற்ற நிலைக்கு இம்மொழிகளின்
                    திறந்த நிலை அல்லது மூடிய நிலையானது ஒரு காரணம் ஆகும். ஆங்கிலத்திலிருந்து ஏதாவது ஒரு
                    நவீன இந்திய மொழிக்கு அல்லது இந்திக்கு மொழிபெயர்ப்பவர்கள் உள்ளனரே தவிர, நடைமுறையில்
                    தமிழ் & மராத்தி, மலையாளம் & குஜராத்தி முதலான இந்திய மொழிகளுக்கிடையே மொழிபெயர்க்கும்
                    மொழிபெயர்ப்பாளர்களைக் காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
 
 ஆங்கில இலக்கிய மொழிபெயர்ப்புகளின் போக்கு ஓரளவு நல்ல நிலையில் இருந்த போதிலும் பின்வரும்
                    மொழிபெயர்ப்புகளின் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. (1)ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படும்
                    பிற வகை நூல்கள், (2) ஆங்கிலம், பிற இந்திய மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்,
                    (3) இந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்பும் சமநிலையற்று காணப்படுகிறது. உதாரணமாக,
                    வங்காள மொழியில் உள்ள 260 நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் மலையாளத்திலிருந்து
                    12 நூல்களே வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இச்சமச்சீரற்ற நிலைக்கு இம்மொழிகளின்
                    திறந்த நிலை அல்லது மூடிய நிலையானது ஒரு காரணம் ஆகும். ஆங்கிலத்திலிருந்து ஏதாவது ஒரு
                    நவீன இந்திய மொழிக்கு அல்லது இந்திக்கு மொழிபெயர்ப்பவர்கள் உள்ளனரே தவிர, நடைமுறையில்
                    தமிழ் & மராத்தி, மலையாளம் & குஜராத்தி முதலான இந்திய மொழிகளுக்கிடையே மொழிபெயர்க்கும்
                    மொழிபெயர்ப்பாளர்களைக் காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
 
 
 |  
                |  |  
                | தற்போது சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே அமைப்புசார்ந்த மரபுவழி மொழிபெயர்ப்புப் பாடங்கள்
                    கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அப்படிப்புகளின் விவரம் பின்வருமாறு: 
 |  
            
                | 1. | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: |  |  
                |  | (i) | மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் |  
                |  | (ii) | பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் |  
                |  | (iii) | மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் |  
                |  | (iv) | மொழியியல் முனைவர் பட்டம் (மொழிபெயர்ப்பியல் உட்பட) |  
                |  | (v) | மொழிபெயர்ப்பில் ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவு |  
                | 2. | ஆக்ரா பல்கலைக்கழகம், கே.எம். இன்ஸ்ட்டியூட் : |  
                | 3. | மொழிபெயர்ப்பில் பட்டயச் சான்றிதழ் பட்டம் |  
                | 4. | இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம்: |  
                | 5. | மொழிபெயர்ப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |  
                | 6. | பண்டிட் ரவிசங்கர் சுக்லாப் பல்கலைக்கழகம்: |  
                | 7. | மொழிபெயர்ப்பில் பட்டயச் சான்றிதழ் |  
                | 8. | சுவாமி இராமானந்த் தீர்த்த மராத்வாடப் பல்கலைக்கழகம்: |  
                |  | (i) | மொழிபெயர்ப்பில் பட்டயம் |  
                |  | (ii) | தொழில்முறை மொழிபெயர்ப்பில் உயர்நிலைப் பட்டயம் |  
                |  | (iii) | மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் |  
                | 9. | ஹைதராபாத் பல்கலைக்கழகம் (பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வி மையம்)(CALTS):
                    மொழிபெயர்ப்பில் முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |  
                | 10. | ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (CIEFL) (தற்போது TEFLU
                    ஹைதராபாத்) (மொழிபெயர்ப்பியல் கல்வி மையம்(CTS): மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் |  
                | 11. | கேரளப் பல்கலைக்கழகம்: மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் |  
                | 12. | மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்: மொழிபெயர்ப்பில் முதுகலைப் படிப்புகள் |  
                | 13. | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்: மொழிபெயர்ப்பில் பட்டயப் படிப்புகள் |  
                | 14. | விஸ்வ பாரதி: நடைமுறை இந்தியில் முதுகலைப் பட்டம் (மொழிபெயர்ப்பு) |  
            
                | மேற்குறிப்பிட்டவை தவிர, சில பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கிய துறைகளிலும் மொழிபெயர்ப்புத்
                    தொடர்பான படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன (உதாரணம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்,
                    கொல்கத்தா, மற்றும் வீர் நர்மத் சௌத் குஜராத் பல்கலைக்கழகம், சூரத்). சில இடங்களில்
                    தனியார் கல்விநிறுவனங்களும் மொழிபெயர்ப்பினைச் கற்றுக்கொடுக்கின்றன (மொழிபெயர்ப்பில்
                    பட்டயம்: மொழிபெயர்ப்புக் கல்வி நிறுவனம் -பதிவு, பெங்களூர்). மொழிபெயர்ப்பிற்காக இதுபோன்று
                    பல்வேறு படிப்புகள் தற்போது கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 
 
 |  
                |  |  
                | இந்திய மொழிகளில் மொழியியல் தரவகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் களத்திலுள்ள
                    ஆய்வாளர்கள், உருவாக்குபவர்கள் முதலானவர்களுக்கு உதவிபுரிவதற்காக இந்திய மொழிகளுக்கான
                    மொழியியல் தரவுக் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. மொழிதரவு என்பது மொழியியல்
                    தொழில்நுட்ப ஆய்விற்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத ஆக்கக் கூறுவாகும். இந்தி மற்றும்
                    இதர மொழிகளில் எந்திரங்கள் படிக்கத்தகுந்த மொழியியல் தரவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
                    இத்திட்டம் வலியுறுத்தும். மொழியியல் தரவுகளைத் திரட்டுதல், செயலாக்குதல், விளக்குதல்
                    போன்ற பல்வேறு சூழல்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ளதால் மொழியியல், புள்ளியியல், பொறியியல்
                    போன்ற பல்வேறு பிரிவுகளை இப்பணிகளில் ஈடுபடுத்துவது அவசியமாகின்றது. |  
            
                |  | » | சொல், பேச்சு மற்றும் சொற்களஞ்சிய அகராதிகள் என்ற வடிவங்களில் மொழியியல் வளங்களுக்கான
                    தரவுக்களஞ்சியம் ஒன்றை அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்குதல். |  
                |  | » | இதுபோன்ற தரவுக் களஞ்சியங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்குத்
                    தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் |  
                |  | » | தரவுகள் சேகரித்தலை தரப்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளின்
                    மொழியியல் விரிதரவினை தேக்ககம் செய்தல். |  
                |  | » | தரவினைச் சேகரித்தலுக்கு உதவும் கருவிகளை உருவாக்குதல், பகிர்தல் மற்றும் நிர்வகித்தல். |  
                |  | » | தொழில்நுட்பம், செயலலாக்கம் சார்ந்த பிரச்சினைகளில் பயிற்சிபெறுவதற்காகப் பயிலரங்குகள்,
                    கருத்தரங்குகள் முதலியவற்றினை நடத்த ஆதரவளித்தல். |  
                |  | » | LDC-IL கூட்டமைப்பின் வளங்களை அணுக முதன்மை நுழைவாயிலாக LDC-IL இணையத்தளம் ஒன்றைத்
                    துவக்குதல் மற்றும் பராமரித்தல். |  
                |  | » | பெரும்பான்மையான மக்களுக்கு உதவும் வகையில் அமைந்த மொழியியல் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்தல்
                    அல்லது உருவாக்குதல். |  
                |  | » | கல்வி நிறுவனங்கள், தனிப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே தேவையான இணைப்பினை
                    ஏற்படுத்துதல். |  
                |  |  
                | இந்நடவடிக்கைகள், எந்திர மொழிபெயர்ப்பிற்கான செயல்பாடுகளை எளிதாக்குவதால் இவை தேசிய
                    மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கு நேரடியாகப் பலனளிக்கும். |  
            
                |  |  
                | எந்திர மொழிபெயர்ப்புச் அமைப்புகளின் திறனைச் சந்தேகிக்கும் ஐயுறவுவாதிகள் இவ்வுலகின்
                    பல்வேறுப் பகுதிகளில் எந்திரமொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் பயன்பட்டு வருவதை அறிந்தால்
                    ஆச்சரியமடையக்கூடும். உதாரணமாக, Systran (ஆல்டாவிஸ்டா தேடுபொறியில் பயன்படுத்தப்படுகிறது)
                    மற்றும் METEO (1977ஆம் ஆண்டிலிருந்து காலநிலை நிகழ்வுகள் குறித்து பத்திரிக்கைகளில்
                    வெளிவந்த சுமார் 45000 சொற்களை மொழிபெயர்க்கக்கூடியது இதனை கனடியன் வானிலை ஆராய்ச்சி
                    மையம் பயன்படுத்துகிறது). உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்), தனது இயற்கை
                    மொழியாய்வுச் செயலாக்கத்திற்கான பணிகள் மற்றும் இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, ஆங்கிலம்,
                    ஜெர்மன் போன்ற மொழிக்கூறு இலக்கணங்களை அலகிடக்கூடிய குறிஒட்டு அலகிடுவான் மேம்படுத்துல்
                    போன்ற முயற்சிகளின் வாயிலாக இந்தியாவில் எந்திரவழி மொழிபெயர்ப்புப் புரட்சியைத் தொடங்கியுள்ளது.
                    இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வேளையில், இந்நிறுவனமானது இப்பணிகளை நிறைவேற்றும்
                    வழிவகைகளைக் கண்டறிய பல்வேறு நிறுவனங்களை அணுகியுள்ளது. எந்திரவழி மொழிபெயர்ப்பின்
                    பரந்த உள்ளாற்றலை உணர்ந்துள்ளதன் விளைவாக, இந்திய அரசின் ஆட்சிமொழித் துறையானது இத்திட்டங்களுக்கு
                    முழுவீச்சில் நிதியுதவி அளித்துவருகின்றது. செய்தித்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப
                    அமைச்சகமானது (MC&IT) வரையறுக்கப்பட்ட களங்களில் மொழிபெயர்ப்பினை மேற்கொள்ளக் கீழ்க்கண்ட
                    களங்களை அடையாளம் கண்டுள்ளது: |  
            
                |  | » | அரசு நிருவாக செயல் முறைகள் மற்றும் படிவங்கள்; |  
                |  | » | பாராளுமன்ற கேள்விகள் மற்றும் பதில்கள். மருந்தாக்கத் தொழிலுக்குரிய தகவல்கள்; |  
                |  | » | சட்டம் சார்ந்த கலைச்சொற்றொகுதிகள் மற்றும் தீர்ப்புரைகள் . |  
            
                | அமைச்சகமானது ‘இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு’ (TDIL) என்ற திட்டத்தை 1990-91
                    ஆம் ஆண்டு எந்திர மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இந்திய மொழிகளில் தகவல் செயலாக்கம் தொடர்பான
                    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் நிதி உதவி செய்யவும் தொடங்கியது.
                    எப்படி இருப்பினும், 22 வேறுபட்ட அலுவலக மொழிகளில் மொழிபெயர்ப்பினை செயற்படுத்துவது
                    என்பது ஒரு கடினமான சவாலானது. அரசு அலுவலகங்களில், பெருமளவிலான கடிதப்போக்குவரத்துக்கள்
                    முக்கியமான இணை மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலம் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே,
                    இவ்விணை மொழிகள் எந்திரவழி மொழிபெயர்ப்பினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளத் அடையாளம்
                    காணப்பட்டுள்ளன. 
 அதற்கிணங்க, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பின்வரும் இரண்டு முறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
                    இந்திய மொழிகளுக்கு இடையேயான எந்திரவழி மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி
                    மொழிகளுக்கு இடையேயான எந்திரவழி மொழிபெயர்ப்பு. நம் நாட்டில் இக்கூரிய தொழில்நுட்பத்தைப்
                    பயன்படுத்திப் பயன்பாட்டுக் கருவிகளை மேம்படுத்துவதில் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம்
                    (சி-டாக்), புனே, NCST (அல்லது உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்),மும்பை என்று
                    தற்போது அழைக்கப்படுகிறது), இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் மற்றும் இந்திய
                    தொழில்நுட்பக் கழகம், கான்பூர் ஆகிய மூன்று நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.
 
 அறிவினைச் சார்ந்த கணினி அமைப்புகள் என்ற திட்டத்தின்கீழ் மின்னணு துறை (DOE), உன்னத
                    கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்) வியாக்கரத்தா VYAKARTA என்னும் தொழில்நுட்பத்தைக்
                    கண்டறிந்தது. இத்தொழில்நுட்பமானது, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் போன்ற
                    மொழிகளில் உள்ள சொல்லிணக்கணக் கூறுகளை அலகிட்டு அவற்றின் விவரங்களைக் கூறுவல்லது. மேலும்,
                    இப்பகுப்பானைப் பயன்படுத்தி MANTRA (அலுவலக மொழி வாக்கியங்களை ஆங்கிலத்தில் இருந்து
                    இந்திக்கு மொழிபெயர்க்க உதவும் எந்திர உதவி மொழிபெயர்ப்புக் கருவி) என்பதும் உருவாக்கப்பட்டது.
                    இந்த நிருவாகத்திற்கு உதவிபுரிக்கூடய ‘ஆங்கிலம் -இந்தி கணினி உதவி மொழிபெயர்ப்பு அமைப்பை
                    திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்கிய அலுவலக மொழிகள் துறையிடம் விளக்கிக் காண்பிக்கப்பட்டது.
                    அலுவலகப் பணியாளர்கள் நிருவாகத்திற்கு உதவும் வகையில் அமைந்த கணினி உதவியுடன் மொழிபெயர்க்கும்
                    அமைப்பு ஒன்றை வடிவமைப்பது மற்றும் மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இவ்வமைப்பானது
                    தற்போது, பணிநியமன ஆணைகள், பணியிட மாறுதல்கள் போன்ற கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகளை
                    மொழிபெயர்க்கும் வகையிலும் நிலையான சொல்தொகுப்பிகள் மற்றும் மேசைப் பதிப்புகளில் உள்ளீடு
                    செய்யும் திறனுடையதாகவும் அமைந்துள்ளது.
 
 மேற்குறிப்பிட்ட களத்தில் ஆங்கிலம்-இந்தி மொழிபெயர்ப்பினை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள
                    நிலையில் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்) மேம்பட்ட பன்மொழி மொழிபெயர்ப்பிற்கான
                    தொழில்நுட்பத்தைப் பிற களங்களில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது.
                    இத்திறன் மூலம் எந்த ஒரு இணை மொழிகளுக்கு இடையேயும் எந்திரவழி மொழிபெயர்ப்பை மேற்கொள்வது
                    சாத்தியமாகும்.
 
 எந்திரவழி மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள மற்றொரு நிறுவனம் மும்பையைச் சேர்ந்த NCST ஆகும்.
                    இந்நிறுவனம் தற்போது உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி-டாக்), மும்பை என்று அழைக்கப்படுகிறது.
                    இந்தியாவில் எந்திர மொழிபெயர்ப்பு பணிகளில் முதன்முதலில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று
                    NCST ஆகும். எண்பதுகளின் பிற்பகுதியில் நாம் குறிப்பிட்ட PTI செய்திகளை மொழிபெயர்க்கும்
                    வகையில் எழுத்துவகையில் அணுகும் முறையில் அமைந்த திரைப்பேச்சு என்ற மூலஅச்சு ஒன்றினை
                    மேம்படுத்தியுள்ளோம். அதன்பிறகு இந்நிறுவனம், முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலம்
                    மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையேயும் மொழிபெயர்ப்பதற்கான பொதுநோக்கு வரைச்சட்டத்தைக்
                    கொண்ட MaTra என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. இம்மென்பொருளை இருவகைகளில் பயன்படுத்தலாம்.
                    தன்னியக்க முறையில், எந்தரம் முதலில் மொழிபெயர்த்துத் தருவதை பிறகு பயனர் சரிசெய்து
                    கொள்ளமுடயும். கைமுறையாக்கத்தில், பயனர் உள்ளுணர்வு வரைகலைப் பயன்படுத்துவோர் இடைமுகப்பைப்(GUI)
                    பயன்படுத்திப் பயனாளர் தாமாகவே சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க வழிகாட்ட முடியும்.
 
 இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூர்
                    போன்றவை தங்களின் அனுசாராக்கா (Anusaaraka), அங்கலபாரதி, அனுபாரதி போன்ற திட்டங்களின்
                    மூலம் இக்கூரிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகின்றன.தற்போது
                    மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகமானது உலகளாவியப் பிணைய மொழி(UNL) என்ற ஒரு நவீன அணுகுமுறையின்
                    மூலம் இத்தொழில்நுட்பச் சிக்கலைக் களைவதற்கான தொடர்முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
                    ‘அங்கலபாரதி’ என்பது எந்திரவழி மொழிபெயர்ப்பில் ஒரு புரட்சிகரமான அமைப்பு ஆகும். காரணம்,
                    இம்முறையின் மூலம் பொது சுகாதார இயக்கங்கள் போன்ற குறிப்பிட்ட களங்களில் ஆங்கிலத்தில்
                    இருந்து இந்திக்கு எந்திர உதவி மொழிபெயர்ப்பின் மூலம் மொழிபெயர்க்க இயலும்.
 
 ஆங்கிலம்- இந்தி எந்திரவழி மொழிபெயர்ப்பில் அனைத்து நடப்புத் திட்டங்களும் தமது சக்திகளை
                    ஒருமுகப்படுத்தியிருந்தாலும் இதனை மற்ற மொழிகளில் விரிவுபடுத்துவது என்பது பெரும் சவாலாகவே
                    உள்ளது. அனுசாராக்கா திட்டமானது முதலில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் தொடங்கப்பெற்றது.
                    பின்னர், புது மாறுதல்களுடன் இத்திட்டமானது, ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொன்றிற்கு
                    மொழிபெயர்த்தல் என்ற தெளிவான நோக்கத்துடன் இந்திய தகவல் தொழில்நுட்பம், ஹைதராபாத் மற்றும்
                    CALTS, ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் கூட்டாக மேம்படுத்தப்பட்டது. அனுசாராக்க
                    என்பது ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றக்கூடிய மென்பொருளாகும். இதன்
                    வெளியீடுகள் மிகச் சரியான இலக்கண விதிகளுடன் இல்லாமல் இருந்தாலும்கூட இதனைப் படிப்பவர்
                    புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். உதாரணமாக, வங்காளம்-இந்தி அனுசராக்காவில்
                    வங்காள மூலப் பாடத்தை இந்தியில் வெளியீடாக உருவாக்க இயலும். ஆனால், இவை படிப்பவர் புரிந்து
                    கொள்ளக்கூடிய வகையில் இருக்குமே தவிர, முழுநிறைவான இலக்கண விதிகளுடன் கூடியதாக இருக்காது.
                    இதுபோன்று, ஒருவர் தனக்குத் தெரியாத மொழியில் உள்ள ஒரு இணையத்திற்குச் சென்று அனுசராக்கா
                    மென்பொருளை இயக்கி மூல உரையினைப் படித்தறிய இயலும். தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராத்தி,
                    மற்றும் பஞ்சாபி மொழிகளில் இருந்து இந்திக்கு அனுசாராக்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
                    திறந்த மூல மென்பொருளுடன் கிடைக்கக்கூடிய வகையில் இவ்வமைப்பானது மேம்படுத்தப்பட்டுள்ளது.
                    இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் தற்போது ‘சக்தி’ என்னும் மொழிபெயர்ப்பிற்கு
                    உதவிசெய்யும் அமைப்பினை உருவாக்கிவருகிறது.
 
 இதில் ஒருவர் கூர்ந்து கவனித்தால், இத்துறையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் இன்னும் பெரிய
                    அளவில் எஞ்சியிருப்பதால் ஆய்வாளர்கள், பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக்கழகங்கள்,
                    மென்பொருள் தொழில்துறையினர் போன்றவர்களை இப்பணிகளில் நிறைமுனைப்புடன் ஈடுபடுத்துவது
                    அவசியமாவது புலப்படும். இதற்கு தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் ஆதரவானது பெரிதும்
                    தேவைப்படுகிறது.
 |  |  |