|  | 
                 
         
         | 
        சூழல்
    
                         
    
        
        
            
                | பிரதமர் அவர்களின் கூற்று |  
                | தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் என்ற எண்ணம் முதன்முதலில் இந்திய பிரதமர் அவர்களிடமிருந்து
                    தோன்றியது. தேசிய அறிவுசார் ஆணையத்தின் (National Knowledge Commission NKC) முதல்
                    குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் அவர்கள், மிக முக்கியமான அறிவுசார் நூல்களின்
                    தேவைகள் அதிகரித்துவரும் துறைகளில் மொழிபெயர்ப்பு நூல்ளை அணுகுவதன் (Access of translated
                    material) அவசியத்தைக் குறிப்பிட்டார். கல்வியிலும் தொடர் கற்றலிலும் மக்களின் பங்கேற்பை
                    வலுப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் தான் இச்சூழல் எழுந்ததற்கான காரணமாகும். இந்தியாவில்
                    கல்வி வளர்ச்சியடைய, மொழிபெயர்ப்புக் கலையை மேம்படுத்துவதற்கான ஒரு தனியான நிறுவனமோ
                    அல்லது திட்டமோ உடனடியாக தேவைப்படுகிறது என்று கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு சாம்பிட்ரோடா
                    அவர்கள் குறிப்பிட்டார்கள். 
 
 |  
            
                | சூழல் |  
                | மொழிபெயர்ப்பு என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு என்பது உண்மை என்றாலும் இந்த முக்கியமானச்
                    செயலில் பொதுமக்களின் பயனுள்ள பங்கேற்பு அவசியம் தேவைப்படுகிறது. முதன்மையாக அது நாட்டிலுள்ள
                    ஒரே தன்மையல்லாத, சமதளமற்ற மொழிபெயர்ப்பு செயல்பாடுகளிலிருந்து வருவதாகும். ஒரே சமதளமற்ற
                    என்பது மொழிகள், கல்வித்துறைப் பிரிவுகள், தரம், விநியோகம் மற்றும் அணுகுமுறை முதலியவற்றினை
                    உள்ளடக்கியதாகும். இலக்கியம், அறிவியல், பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல், சட்டம்,
                    மருத்துவம், நிர்வாகம், தொழில்நுட்பம், ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாகத் தோன்றிவரும்
                    செயற்களப்பகுதிகளில் மொழிபெயர்ப்பின் தேவை அங்கீகரிக்கப்படாத நிலையில் உள்ளது. 
 
 |  
            
                | மேலும், மொழிபெயர்ப்பின் வழியாகக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லாமல் சமச்சீரற்றதாக
                    (asymmetric) உள்ளது. மொழிபெயர்ப்பை வாசிப்பவர்கள் ஒருங்கிணைக்க முடியாத அளவில் சிதறிக்
                    கிடப்பதால் மொழிபெயர்ப்பானது பிரபலப்படுத்தப்படுவது திருப்திகரமாக இல்லை. காரணம், மொழிபெயர்ப்பைச்
                    சந்தைப்படுத்துவது என்பது மதிப்பிடப்படாமலும் உறுதிசெய்யப்படாமலும் உள்ளது. தரமான மொழிபெயர்ப்புகளைப்
                    பிரபலப்படுத்துவதன் மூலமே இந்தத் துறையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு
                    ஒரு குறிப்பிட்ட இடத்தை/மட்டக்குறியையும் (bench mark) எழுச்சியையும் ஏற்படுத்த இயலும்.
                    இந்தச் சூழல்தான் திட்டத்தின் நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்கேற்பைக் கட்டாயப்படுத்தும்.
                    இந்நடவடிக்கைகள், வெவ்வேறு துறைகளில் முதற்தரமான மொழிபெயர்ப்புகள் எளிதாகக் கிடைக்கக்கூடிய
                    வகையில், தனிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிக்கும் செயல்களாக அமையும். மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின்
                    மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியும். வேலையில்லாதப் படித்தவர்களுக்கு
                    ஒரு வருவாயை ஏற்படுத்தித் தரக்கூடிய பணியைப் பெற இயலும் என்பதோடு மக்களுக்குச் சேவையாற்றவும்
                    இது ஊக்கமளிக்கிறது. 
 
 |  
                | இத்தகைய விழிப்புணர்ச்சிதான் மொழிபெயர்ப்புத் தொடர்பான நடவடிக்கைகளான நூல் வெளியீடுகள்,
                    பிரசுரங்களில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு செயலாண்மை வட்டாரங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை
                    ஒருங்கிணைக்கும் வகையில் பேராசிரியர் ஜெயதி கோஷ் தலைமையில் ஒரு பணியமைப்பை ஏற்படுத்தவேண்டும்
                    என்ற நிலையில் தேசிய அறிவுசார் ஆணையத்தை ஏற்படுத்தும் எண்ணத்தைத் தோற்றுவித்தது. இந்தியாவில்
                    உள்ள சம்மந்தப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள் (semi-government organization),
                    கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும்
                    மொழிபெயர்ப்போடு தொடர்புடையவர்களின் பிரதிநிதிகள் இவ்வாணையத்தில் இடம்பெற்றுள்ளனர்.
                    இக்குழு 2006 பிப்ரவரியில் தில்லியில் கூடியபோது பேராசிரியர் உதய நாராயண சிங் அவர்களால்
                    இத்துறையின் களங்கள் பற்றிய விரிவான உருவரை விரித்துரைக்கப்பட்டது, 06.03.2006அன்று
                    தேசிய மொழிபெயப்புத் திட்ட உறுப்பினர்-செயலரானப் பேராசிரியர் ஜெயதி கோஷ் அவர்கள் தேசிய
                    அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட முன்மொழிவுகளைத்
                    திட்டக்குழுவின் துணைத் தலைவருக்கு அனுப்பினார். அதன்பிறகு, அக்குழுக்கள் பலமுறைக்
                    கூடியதோடு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரில் 12-13.4.2007 தேதிகளில் பெரிய
                    அளவிலானப் இருநாள் பயிலரங்கினை நடத்தியது. திட்டக்குழு தனது கடித எண். P.11060/4/2005-Edn
                    நாள் 19.04 2006 இன்படி இத்திட்டத்தைப் பற்றி ஐந்து வினாக்களையும் எழுப்பியிருந்தது.
                    அவற்றிற்குரிய விளக்கம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் CSDS, ICHR போன்ற
                    நிறுவனங்களைச் சார்ந்த சமூகவியல் அறிஞர்களிடமிருந்து சில விரிவான கருத்துரைகள் பெறப்பட்டன.
                    இவை தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் கட்டமைப்புப் பற்றிய பல்வேறு
                    செயல்முடிவுகள் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் அவற்றிற்குரிய பயனுள்ள தீர்வுகள் பற்றியதாகும்.
                    அவற்றில் ஒரு சில தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையில் (DPR) சேர்க்கப்பட்டுள்ளன.
                    21.06.2006 மற்றும் 03.07.2006 ஆகிய தேதிகளில் மொழிபெயர்ப்பு பற்றிய கருத்துக்களும்
                    பல்வேறு நூல் வெளியீட்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்பட்டன. அதன் பின்னர் 231.08.2006
                    ஆம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மொழிகள் மற்றும் நூல் வளர்ச்சியின் பணிக்குழுவும்
                    (Ministry of HRD’s working Group on Languages and Book Promotion) திட்டக்குழுவுக்கு
                    அனுப்பிய 11வது ஐந்தாண்டுக்காலத் திட்டத்துக்கானப் பரிந்துரைகளின்படி இந்தக் கருத்தை
                    ஆமோதித்தது. இதன் தொடர்ச்சியாக 01.09.2006 இல் தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவரான
                    திரு சாம் பிட்ரோடா இத்திட்டத்தைப் பற்றிய விவரங்களைப் பிரதமருக்கு அனுப்பினார். அதன்
                    பிறகு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் விரிவான திட்ட அறிக்கையானது தயாரிக்கப்பட்டது. |  |  |